search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளாவில் மார்க்சிஸ்டு தொண்டர் கொலை"

    கேரளாவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் மார்க்சிஸ்டு தொண்டரை வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு, உக்கிலாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் இரு மாணவர்கள் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று மாணவர்கள் இருவரும் பள்ளி வகுப்பறையில் இருந்த தேர்வு தாள்களை எடுக்கச் சென்றனர். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இது கைகலப்பாக மாறியது.

    அப்போது ஒரு மாணவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் இன்னொரு மாணவரை சரமாரியாக குத்தினார்.

    இதில் அந்த மாணவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வகுப்பறையில் இருந்த மாணவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய மாணவரை மீட்டு காசர்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்து போன மாணவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த முகமது மஜிலாக் (வயது16) என்பவர் ஆவார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது மஜிலாக்கை கொலை செய்ததாக பிளஸ்-1 மாணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காசர்கோடு உப்பாலா பகுதியைச் சேர்ந்தவர் சித்திக்(25). மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தொண்டர். நேற்று பகல் 11 மணிக்கு சோன்கால் பகுதியில் நடந்துச் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் சித்திக்கை வழி மறித்து சரமாரியாக தாக்கியது, அரிவாளாலும் வெட்டினர்.

    இதில் சித்திக் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் வழியிலேயே சித்திக் இறந்து போனார்.

    இந்த சம்பவத்திற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். சித்திக் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா கட்சியினரே காரணம் என்றும் கூறினர். சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    ×